தொன்று தொட்டு அனுதினமும் அமுதுபடைக்க
அடுக்களையில் உழன்ற அறுவகை சுறுதானியன்களான
கம்பு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, ராகி - ஆகியவை
மேலை நாட்டு உணவகங்களின் படையெடுப்பால்
இடைக்காலத்தில் சற்று பின்னடைந்திருந்தது - ஆனால்
இன்று மக்கள் சற்று சுதாரித்து
சிந்தித்து செயலாற்ற துவங்கியுள்ளனர்.
இவ்விழிப்புணர்வின் விளைவு,
வீட்டிலிருந்து - விவாஹ மண்டபம் வரை,
சிற்றுண்டி உணவகத்திலிருந்து - நட்சத்திர விடுதி வரை,
சாமை பொங்கல், கம்பங் கூல்,
சிறுதானிய அடை, ராகி ரொட்டி,
கருப்பட்டி காபி, பனங்கல்கண்டு பாயசம்,
பல பதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.
எலும்புக்கு வலிமை தரும் கால்சியம்,
ரத்த சோஹையை சரிசெய்யும் இரும்புச்சத்து,
இரத்த சர்க்கரை அளவை சீராக்கும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ்,
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து; நல்ல கொலஸ்ட்ரால் மேன்படுத்தும் சத்துக்கள்,
நன்மை பயக்கும் நார்ச்சத்து என அனைத்து சத்துகளின் சங்கமம்.
இத்தானியங்களில் சமைத்த பண்டம் எதுவானாலும்
ஐயம் இட்டு உண்ணுங்கள்;
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பதை அறிவோம், ஆராதிப்போம்!

No comments:
Post a Comment